கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு

கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-10-04 14:59 IST

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி திரிபுரசுந்தரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை திரிபுரசுந்தரி அந்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றார்.

நீண்ட நேரமாக இவர் வராததால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் வயலுக்கு சென்று பார்த்தபோது திரிபுரசுந்தரி அங்கு உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. திரிபுரசுந்தரி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்