அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.;

Update:2023-10-13 19:30 IST

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 53). இவர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் தேர்தல் உயர் அதிகாரியாக வேலை செய்வதாக அரசு அடையாள அட்டையை காண்பித்து, தனக்கு கலெக்டர், தாசில்தார், நீதிபதி, அமைச்சர் ஆகியோர் நன்கு தெரிந்தவர்கள், அவர்கள் மூலம் அரசு வேலை, அரசு நிலம், அரசு கடன் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நம்பி அவரிடம் வண்டலூரை சேர்ந்த ஆண்டிகண்ணு, வனிதாகுமாரி, முடிச்சூரை சேர்ந்த திவ்யா, கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திகேயன், ஓட்டேரியை சேர்ந்த ஹேமலதா உள்ளிட்டோர் லட்ச கணக்கில் பணம் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி அவர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமல் இவர்கள் உள்பட பலரிடம் சாந்தி ரூ.35 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாந்தியிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்