மொபட்டில் 'லிப்ட்' கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து சாவு

மொபட்டில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2022-10-02 21:59 GMT

திருவெறும்பூர்:

மொபட்டில் சென்றார்

திருவெறும்பூர் அருகே உள்ள பொய்கைக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி ஞானஒளி(வயது 35). இவர் கட்டிட பணியில் சித்தாள் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சுக்காக துவாக்குடி பஸ் நிலையத்தில் ஞானஒளி காத்திருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த குமார் என்பவர் தனது மொபட்டில் வந்தார். அவரிடம் 'லிப்ட்' கேட்டு ஞானஒளி மொபட்டில் சென்றார். பொய்கைக்குடி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் மொபட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் ஞானஒளி பலத்த காயமடைந்தார்.

சாவு

அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்ட ஞானஒளி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்