அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண் கைது

அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-27 22:54 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ.பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் ரேணுகா. இவருடைய அழகு நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், ரேணுகாவின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் மாதவரம் பால்பண்ணை போலீசில் ரேணுகா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பெண் கைது

இந்த நிலையில் நேற்று மாதவரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவர், புதுச்சேரி ஜல்லடியன் பேட்டை வீராத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த டெய்சி என்ற சின்னு (வயது 40) என்பதும், இவர், ரேணுகாவின் அழகு நிலையம் உள்பட பல அழகு நிலையங்களுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிவந்ததும் தெரிந்தது.

இவ்வாறு புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களிலும், தமிழகத்தில் திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. டெய்சியை ேபாலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்