மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண் டிராக்டர் மோதி படுகாயம்

மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண் டிராக்டர் மோதி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-17 19:22 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 35). இவரின் மனைவி மோகனப்பிரியா (30). இருவரும் செய்யாறு-ஆற்காடு சாலையில் செல்லும்போது, ஒரு தனியார் தோட்டக்கலைக் கல்லூரி அருகே அரும்பாக்கத்தைச் சேர்ந்த துரைக்கண்ணுவின் மகன் விக்னேஷ் (27) கல்லூரி உள்ளே இருந்து வெளியே டிராக்டரை ஓட்டிக்கொண்டு வரும்போது திடீெரன மாடுகள் சென்றன.

மாடுகள் மீது மோதாமல் இருக்க டிராக்டரை ஓரமாக ஓட்டி உள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த கேசவன்-மோகனப்பிரியா மீது டிராக்டர் மோதியது. அதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மோகனப்பிரியா பலத்தகாயம் அடைந்தார். அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவர் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்