கடலூரில் பரபரப்பு: கணவரின் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் - போலீசார் விசாரணை
கடலூரில் கணவரின் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகர்,
கள்ளக்காதலிக்கு பணம்
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய பெண். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவியுடன் தங்கியிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையே அந்த வாலிபர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது அவர் தனது வீட்டின் குடும்ப செலவுக்கு சரிவர பணம் அனுப்பாமல், தனது கள்ளக்காதலிக்கு மாதந்தோறும் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆபாச படம்
இந்த நிலையில் அந்த வாலிபர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வாலிபரின் செல்போனை எடுத்து அவரது மனைவி பார்த்துள்ளார். அப்போது செல்போனில் தனது கணவரின் கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அவர், கணவரின் கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அவரை தட்டிக் கேட்டுள்ளார். இருப்பினும் ஆத்திரம் தீராத அவர், தனது கணவரின் செல்போனில் இருந்த ஆபாச படங்களை தனது செல்போனுக்கு அனுப்பி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து 35 வயதுடைய பெண், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை பெண் சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.