மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை வழிமறித்து நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை வழிமறித்து நகையை பறித்து சென்றனர்.

Update: 2023-04-03 19:44 GMT

சிவகாசி, 

சிவகாசி மாரியம்மன் கோவில் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சிவகாசி-நாரணா புரம் ரோட்டில் உள்ள பர்மாகாலனியை சேர்ந்த தாழம்பூராஜன் மனைவி சத்யதேவி (வயது 41) என்பவர் இரவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பி.கே.எஸ்.அறுமுக நாடார் ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் சத்யதேவியை வழிமறித்துள்ளார். அவர் விலாசம் கேட்க நின்று இருக்கிறார் என நினைத்த சத்யதேவி அவரிடம் பேச முயற்சி செய்த போது திடீரென அந்த வாலிபர் சத்யதேவியின் கழுத்தில் கிடந்த தங்கநகையை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யதேவி நகையை பிடித்துக் கொண் டார். இதில் ஒரு பகுதி அந்த வாலிபரின் கையில் சிக்கி கொண்டது. ஆள்நடமாட்டம் குறைந்த அளவில் இருந்ததால் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார். இது குறித்து சத்யதேவி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகையை பறித்து சென்ற வாலிபர் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்ததால் அவரை அடையாளம் காட்ட முடியாத நிலையில் சத்யதேவி இருந்துள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்து காட்சிகளை கொண்டு சிவகாசி கிழக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்