சாலையோரம் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

சாலையோரம் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.;

Update: 2023-07-12 08:06 GMT

திருத்தணி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி இந்திராணி (வயது 45). இந்திராணி தினமும் வெங்கடாபுரம் கிராமத்திற்கு தேசிய ஊரக வேலைக்காக திருத்தணியில் இருந்து நடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 7-ந் தேதி வழக்கம் போல் தேசிய ஊரக வேலைக்கு திருத்தணி- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையோரம் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இந்திராவின் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த இந்திராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இந்திராணி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் இறந்த இந்திராணிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்