கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தூசி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செய்யாறு சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-07-20 16:55 GMT

தூசி

தூசி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செய்யாறு சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம்

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சோழவரம் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்.

இவரது மகள் பவித்ரா (வயது 27). இவருக்கும் செய்யாறு தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கும் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சகாதேவன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவருடன் வாழ விருப்பம் இல்லாமலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் கடந்த ஒரு ஆண்டாக பவித்ரா கணவரை பிரிந்து தந்தை முருகேசனுடன் சோழவரம் கிராமத்தில் வசித்து வந்தார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

மேலும் குழந்தை இல்லாத காரணத்தால் மன வேதனையில் பவித்ரா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பவித்ரா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து முருகேசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-கலெக்டர் விசாரணை

மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளில் பவித்ரா தற்கொலை செய்து கொண்டதால், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்