அரசு பஸ்களை வழிமறித்த காட்டுயானை

அரசு பஸ்களை வழிமறித்த காட்டுயானை

Update: 2023-06-28 20:15 GMT

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பாட்டவயல், பிதிர்காடு, முக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை பொதுமக்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் பாட்டவயல் பகுதியில் புகுந்த ஒற்றை காட்டுயானை, அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து யானையை விட்டு விலக்கி இயக்கியவாறு பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றார். அதன்பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் அங்குள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியையும் யானை முற்றுகையிட்டது. இது தவிர பாட்டவயலில் இருந்து கூடலூர், சுல்தான்பத்தேரி, அம்பலமூலா, அய்யன்கொல்லி செல்லும் பஸ்களையும் காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்