விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மீண்டும் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

Update: 2023-08-19 12:51 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மீண்டும் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

ஒற்றை யானை

பேரணாம்பட்டு வனச்சரக பகுதி சேராங்கல் காப்புக்காடு, மோர்தானா காப்புக்காடு பகுதிகளில் சுற்றித்திரிந்து வரும் ஒற்றை யானை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் மற்றும் மா, வாழை தோப்புகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்தநிலையில் நாய்க்கநேரி காப்புக்காடு பகுதிக்கு சென்ற இந்த ஒற்றை யானை பத்தலப்பல்லி அணை திட்ட பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் புகுந்தது. சேட்டு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிரை மிதித்து நாசம் செய்ததுடன், அருகிலுள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை செடிகளை பிடுங்கியும், மிதித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

விரட்டினர்

இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு, விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனவர் இளையராஜா மற்றும் வனத்துறையினர் சென்று விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து ஒற்றையானையை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Reporter : S. MEENAKSHI Location : Vellore - VELLORE SUB-URBAN - PERNAMPET

Tags:    

மேலும் செய்திகள்