சாலையில் உலா வந்த காட்டு யானை

சாலையில் உலா வந்த காட்டு யானை

Update: 2022-07-16 07:05 GMT

கூடலூர்

கூடலூரில் உள்ள கெவிப்பாரா பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக நடமாடி வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  அதிகாலை 4 மணிக்கு கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேண்ட் தெருவில் காட்டுயானை உலா வந்தது. அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சாலையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை, தொடர்ந்து தனியார் எஸ்டேட் வழியாக கோக்கால் மலைக்கு சென்றது. இருப்பினும் காட்டுயானை அடிக்கடி அப்பபகுதிக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்