வீட்டை உடைத்த காட்டு யானை

கொளப்பள்ளி அருகே வீட்டை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-16 23:15 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர் பகுதிக்குள் யானை புகுந்தது. அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது வீட்டின் ஒரு பகுதியை உடைத்தது. அங்கு சமையல் அறையில் இருந்த அரிசி மற்றும் உணவு பொருட்களை காட்டு யானை தின்றும், கீழே வீசியும் சேதப்படுத்தியது. இதனால் சத்தம் கேட்டு, தூங்கி கொண்டிருந்த முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் ஒரு அறையில் பதுங்கினர். மேலும் வீட்டின் மேற்கூரையை யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்ட முயன்றனர். ஆனால், யானை அங்கிருந்து செல்லவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். பின்னர் அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்