காட்டு யானை தாக்கி கூடாரம் சேதம்
பெரிய சூண்டியில் காட்டு யானை தாக்கி கூடாரம் சேதமடைந்தது.
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சண்முகேஸ்வரன் என்பவரது வீட்டை காட்டு யானை முற்றுகையிட்டது. பின்னர் வீட்டின் அருகே இருந்த கூடாரத்தை காட்டு யானை உடைத்து தள்ளியது. இதில் அதன் மேற்கூரைகள் முழுமையாக சேதம் அடைந்தது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சண்முகேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியேறி உறவினர் வீட்டில் தங்கினர். தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது.