தம்பியின் செயலால் பிரிந்து சென்ற மனைவி... கொலைகாரனாக மாறிய அண்ணன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தில் தொடர்ந்து தகராறு செய்து வந்த தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞர் கந்தசாமி. இவர் நேற்று வீட்டிற்குள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளைஞரின் இளைய சகோதரரான ராஜா என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், மூத்த சகோதரனான சரவணகுமாரை தேடி வந்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் கந்தசாமி, மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் அவரது சகோதரரான சரவணகுமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. இதனால் மனைவி விட்டுச் சென்ற கோபத்திலிருந்த சரவணகுமார், சம்பவத்தன்று தம்பியை கத்தியால் குத்திக் கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.