தென்மாவட்டங்களில் புகையிலை பொருட்கள் விற்ற மொத்த வியாபாரி சிக்கினார்

தென்மாவட்டங்களில் புகையிலை பொருட்கள் விற்ற மொத்த வியாபாரி சிக்கினார்: 10 வங்கி கணக்குகள் முடக்கம்.

Update: 2022-09-28 21:46 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு போலீசார் புகையிலை பொருட்கள் கடத்திய சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெங்களூரு பின்னிபேட் பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் சாமுவேல் ஜெயக்குமார் என்ற சாம் (வயது 50) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் அங்குள்ள ஒரு அபார்ட்மென்டில் தங்கி இருந்த சாமுவேல் ஜெயக்குமாரை கர்நாடகா போலீஸ் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சாமுவேல் ஜெயக்குமார் மொத்தமாக புகையிலை பொருட்களை பல நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விற்பனைக்கு அனுப்பி உள்ளார். இதற்காக அவர் பெற்ற பணத்தை முறையாக கணக்கில் காண்பிக்கும் வகையில் போலியாக 3 கம்பெனி பெயர்களை உருவாக்கி, அந்த நிறுவன வங்கி கணக்குகளில் வரவு வைத்து உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சாமுவேல் ஜெயக்குமார் பெயரில் உள்ள 10 வங்கி கணக்கில் இருந்த ரூ.16 லட்சம் பணத்தை போலீசார் முடக்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்