நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை - செங்கல்பட்டில் அதிர்ச்சி
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை ஏற்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் ஊராட்சியில் 9-வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வரும் நீலா என்பவருக்கு எதிராக அதே பகுதியைச் சேர்ந்த 4- பேர் தீர்மானத்தில் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஜூல்பிகார் என்பவர் மீது, சிலர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை ஏற்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.