அருணாலேஸ்வரர் கோவிலில் நடராஜர் சன்னதியில் கொட்டிய மழை நீர் சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ காட்சி

அருணாசலேஸ்வரர் கோவில் நடராஜர் சன்னதியில் மழைநீர் கொட்டியதுபோன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

Update: 2022-10-22 18:45 GMT

திருவண்ணாமலை, அக்.23-

அருணாசலேஸ்வரர் கோவில் நடராஜர் சன்னதியில் மழைநீர் கொட்டியதுபோன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது நடராஜர் சன்னதியில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுவது போன்ற வீடியோ சமூக வலை தளத்தில் பரவியது.

மழை நீர் வடிகால் வசதியுடன் இக்கோவில் கட்டமைக்கப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் கோவிலுக்குள் உள்ள நடராஜர் சிலை இருக்கக் கூடிய பகுதியில் மழை நீர் எப்படி வந்தது என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.

இது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டபோது, ''கோவில் வளாகத்தில் மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் உள்ளது. மழை நீர் வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் கோவிலின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கி நடராஜர் சன்னதியில் இறங்கியுள்ளது. இந்த தகவலறிந்த சில நிமிடங்களில் வடிகால் அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டது. நடராஜர் சன்னதியில் மழை நீர் கொட்டிய காட்சியை அந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து கோவிலின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்