கொள்ளையர்கள் காரில் வந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ காட்சி

கொள்ளையர்கள் காரில் வந்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ காட்சி பரவுகிறது

Update: 2023-02-14 16:38 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையங்களில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் டாடா சுமோ காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கொள்ளையர்கள் நள்ளிரவு சுமார் 1.30 மணியில் (12-ந் தேதி) இருந்து 12-ந் தேதி அதிகாலை 4 மணிக்குள் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை தேனிமலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சுமார் 2 மணியளவில் கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று தற்போது வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

அந்த வீடியோ காட்சியில் காரில் இருந்து ஒருவர் இறங்கி சென்று சில வினாடிகளில் மீண்டும் வந்து காரில் ஏறி செல்வது போன்று பதிவாகி உள்ளது.

ஆனால் இந்த பதிவு கொள்ளையர்கள் வந்த காட்சி தான் என்று போலீஸ் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்