சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரம்

விளையாடிய போது சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

Update: 2023-10-03 18:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கள்ளுகுண்டு கரை நாடியம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் செர்வாண்டிஸ் (வயது 4). இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சில்வர் பாத்திரம் ஒன்று தவறுதலாக சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து சிறுவனின் தந்தை உள்ளிட்டோர் சிறுவனின் தலையில் மாட்டிய சில்வர் பாத்திரத்தை நீண்ட நேரம் அகற்றுவதற்காக முயன்றும் முடிய வில்லை. இதையடுத்து சுரேஷ் இதுகுறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு மற்றும் மீட்பு குழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரத்தை பத்திரமாக அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்