மின்கம்பியில் 'டியூப் லைட்'; பொதுமக்கள் அதிர்ச்சி

சின்னகல்லப்பாடி கிராமத்தில் மின்கம்பியில் டியூப் லைட் கட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-11-08 13:40 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னகல்லப்பாடி கிராமம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, கிழக்கு தெரு, சன்யாசிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு தெரு விளக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும் தனித்தனியாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. அதில் சில இடங்களில் எல்.இ.டி. பல்புகளும், சில இடங்களில் எல்.இ.டி. டியூப் லைட்டுகளும் பொருத்தப்பட்டு வருகிறது.

சில இடங்களில் மின் கம்பிகளில் 'டியூப் லைட்டு'கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது மட்டுமல்லாமல் மின் கம்பிகளில் மின்விளக்கு கட்டப்பட்டுள்ளதை அவ்வழியாக செல்பவர்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து செல்லக்கூடிய சூழ்நிலைகளும் காண முடிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கென்று தனியாக பைப்புகள் அமைத்து மின்விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் இதுபோன்று மின்விளக்குகள் கட்டப்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்