குண்டுக்கல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

காவல்கிணறில் குண்டுக்கல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-08-07 21:43 GMT

பணகுடி:

ராதாபுரம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு நேற்று ஒரு கன்டெய்னர் லாரி குண்டுக்கல் ஏற்றிக் கொண்டு சென்றது. காவல்கிணறு வடக்கு மேம்பாலத்தில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இடதுபக்க தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனால் கற்கள் சாலையில் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்