கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

கடலூரில் கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-10-18 20:05 GMT

கடலூர்:

கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து டிப்பர் லாரி ஒன்று கிராவல் மண் ஏற்றிக் கொண்டு நேற்று மாலை திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்தது. லாரியை கடலூரை சேர்ந்த சந்தானம் என்பவர் ஓட்டினார். அந்த டிப்பர் லாரி வண்டிப்பாளையம் சாலையில் உள்ள வளைவில் வேகமாக திரும்பிய போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிப்பர் லாரியில் இருந்த கிராவல் அனைத்தும் சாலையோரம் கொட்டியது. மேலும் இந்த விபத்தில் டிரைவர் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்