தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-07-27 22:45 GMT

அந்தியூர்

வேலூரில் இருந்து கோவைக்கு சிலிகான் மணல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் மேட்டுர் அணைப்பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 48) என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பொரிக்கடை சந்திப்பு அருகே நேற்று சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி நிலைதடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியதுடன், அங்கிருந்த மின் கம்பத்திலும் மோதியது. இதில் மின் கம்பம் உடைந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவரான துரைராஜ் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் மின் கம்பத்தில் லாரி மோதியதால் அந்த பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்தையும் சீர் செய்தனர். இதேபோல் மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'அந்தியூர் பொரிக்கடை சந்திப்பு அருகே சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் தடுப்பு சுவர் மீது ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தடுப்பு சுவர் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், தடுப்பு சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவையொட்டி அதிக அளவில் வாகனங்கள் வரும் என்பதால், விரைவில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்