ஏ.எல்.சுப்பிரமணியன் படத்துக்கு மரியாதை

தி.மு.க. முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது

Update: 2022-10-27 21:03 GMT

நெல்லை மாநகராட்சி முன்னாள் தி.மு.க. மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.எல்.சுப்பிரமணியன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படம் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அங்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் ஏ.எல்.சுப்பிரமணியன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன், நெல்லை மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே ஏ.எல்.சுப்பிரமணியன் படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா, நெல்லை மாநகர தி.மு.க செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்