வீட்டின் மீது மரம் விழுந்தது ெபாக்லைன் மூலம் அகற்றம்

வீட்டின் மீது மரம் விழுந்தது ெபாக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

Update: 2022-12-10 18:53 GMT

சோளிங்கர்

வீட்டின் மீது மரம் விழுந்தது ெபாக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தில் பலத்த மழையால் போய்டுதெருவில் உள்ள ஒரு மின்கம்பம் உடைந்தது. அதே பகுதியில் சோளிங்கர்-பரவத்தூர் வழியாக திருத்தணி செல்லும் சாலையில் புளியமரம் வேரோடு முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் சோளிங்கரில் இருந்து பரவத்தூர் வழியாக திருத்தணிக்கு செல்லும் வடக்குப்பருவத்தூர், மெத்தவாடி, ஜானகாபுரம், அகச்சிகுப்பம், ஜோதி மோட்டூர், மாம்பாக்கம் சத்திரம், வெங்குப்பட்டு அயலம்பேடு, ஜிகுலூர், கொண்டாபுரம், கங்காபுரம், எம்பி குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தப்பூர் பகுதியில் புளியமரம் ஒன்று விழுந்ததால் கிராம மக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதேபோல சோளிங்கரை அடுத்த வெங்குப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகாலணி பகுதியில் கூலித்தொழிலாளிகள் சின்னமணி, அம்ரோஸ் ஆகியோரின் ஓட்டு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்