சாலையில் மரம் முறிந்து விழுந்தது
ஊட்டியில் பலத்த காற்றுக்கு சாலையில் மரம் முறிந்து விழுந்தது.;
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து வெயில் அடித்தாலும் பலத்த காற்று வீசுகிறது. தொடர் மழையால் மண்ணின் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால், ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஊட்டி ரோகினி பகுதியில் இருந்து தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து சுற்றுச்சுவர் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மாற்று வழியில் சென்றனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.