வீட்டின் மீது மரம் விழுந்து மூதாட்டி படுகாயம்
வீட்டின் மீது மரம் விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் புழுதி பறப்பது மட்டுமின்றி, சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மணப்பாறை பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் மணப்பாறையை அடுத்த செவலூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வரதம்பாள் (வயது 80) என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. இதில் வீடு முழுவதும் சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வரதம்பாள் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.