சாலையின் குறுக்கே மரம் விழுந்தது

சாலையின் குறுக்கே மரம் விழுந்தது

Update: 2022-10-10 18:45 GMT


கோவை பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் ஒன்று நேற்று மதியம் திடீரென்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி சிக்னல் செல்லும் முக்கிய சாலை என்பதால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாதபடி அணிவகுத்து நின்றன. இதையடுத்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் மின் வாள் மூலம் அந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் வாகன போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்