புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

பழனி அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-24 19:45 GMT

பழனி அருகே உள்ள ஒபுளாபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அங்குராஜ் (வயது 47) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து சுமார் 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்