ஆவியூர் ஊராட்சிக்கு அரசு சார்பில் டிராக்டர்

ஆவியூர் ஊராட்சிக்கு அரசு சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.

Update: 2023-04-14 19:03 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆவியூர் ஊராட்சியில் குப்பைகளை பெறுவதற்கு எந்தவித வாகன வசதியும் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு ஆவியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ரவி ஆவியூர் ஊராட்சிக்கு குப்பைகளை பெறுவதற்கு டிராக்டர் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஆவியூர் கிராமத்தில் உள்ள குப்பைகளை பெறுவதற்கு தமிழக அரசு டிராக்டர் வழங்கியது. இந்த டிராக்டரை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமியிடம் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்