போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9,091 பேர் எழுதினர்

கோவையில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9,091 பேர் எழுதினர்.

Update: 2022-11-27 18:45 GMT


கோவையில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9,091 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

கோவை மாவட் டத்தில் கோவை பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவி யல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடந்தது.

அதிகாலை முதலே தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்து காத்தி ருந்தனர். காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களை தீவிர சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். தேர்வு எழுத தேவை யான பேனா, ஹால்டிக்கெட் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

9,091 பேர் எழுதினர்

மேலும் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டை சரிபார்த்து உள்ளே அனுப்பினர். தேர்வர்கள் காலை 9.50 மணி வரை அனுமதிக்கப்பட் டனர். அதன்பிறகு வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியதும், தேர்வர்களின் ஹால்டிக்கெட் மற்றும் அதில் உள்ள புகைப்படங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். 12.40 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.

தேர்வின் இடையே அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்ட னர். முன்னதாக இந்த தேர்வை எழுத கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 309 பேர் விண்ணப்பித்து இருந் தனர். அதில் 9 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுதினர். 3,218 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன் மூலம் 25 சதவீதம் பேர் வரை தேர்வு எழுத வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்