பசு மாட்டை கடித்து கொன்ற புலி

கோத்தகிரி அருகே பசு மாட்டை புலி கடித்து கொன்றது.;

Update: 2023-10-02 22:00 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் பகுதியில் காட்டு யானைகள், புலிகள் நடமாட்டம் உள்ளது. இதற்கிடையே அப்பகுதி பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை புலி, சிறுத்தை கடித்துக் கொன்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மகாதேவன் என்பவரது பசு மாட்டை புலி கடித்துக் கொன்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலி நடமாட்டத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி கடித்து கொன்று உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்