நெகமம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

நெகமம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

Update: 2022-12-11 18:45 GMT

நெகமம்

நெகமம் அருகே பட்டணம் பிரிவில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றவரை நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நெகமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெகமம் நால் ரோட்டில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த ேபாலீசார் அந்த நபரை துரத்தி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பொள்ளாச்சி அண்ணா நகர் டி.கோட்டம்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி மகன் பார்த்தீபன் (வயது 39) என்பதும், மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது. இதேபோல் அந்தப்பகுதியில் உள்ள 2 மோட்டார்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பார்த்தீபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் தங்க ெசயின் மற்றும் மோட்டார்கள் மீட்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்