10 முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.எல்.ஏக்கள் கொடுத்த 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வறித்தை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

Update: 2022-10-14 18:48 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.எல்.ஏக்கள் கொடுத்த 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வறித்தை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் மீது தீர்வு காண்பதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. முதல்-அமைச்சர் அறிவித்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை நிறைவேற்றும் வகையில் அந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்கி அரசுக்கு அனுப்பிட உத்தரவிட்டிருந்தார். தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்களும் தலா 10 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளனர்.

ஆய்வறிக்கை

அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஆராய்ந்து, கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் ஆய்வறிக்கைகளை கவனமாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த அறிக்கைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் நேரடியாக ஒவ்வொரு மனுக்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்