சேலம் தாதகாப்பட்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பயங்கர தீ விபத்து

சேலம் தாதகாப்பட்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-01-08 20:13 GMT

அன்னதானப்பட்டி:

தீ விபத்து

சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகத்சிங்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. நேற்று வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்டனர். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. மேலும் தீயானது அருகே உள்ள சாந்தி என்பவர் வீட்டிற்கும் பரவியது.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச் செல்வன் தலைமையிலான வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த துணிகள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ஓட்டு வீடுகள் என்பதால் இரண்டு வீடுகளும் கடுமையாக சேதமடைந்தன.

பெரும் சேதம் தவிர்ப்பு

மேலும் கியாஸ் சிலிண்டர்களை அருகில் இருந்தவர்கள் எடுத்து வெளியே வைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு கீழே தவறி விழுந்து துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்