காஞ்சீபுரம் அருகே 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தை

காஞ்சீபுரம் அருகே 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தையை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் திறந்து வைத்தார்.

Update: 2022-10-31 08:18 GMT

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் நவீன வளாகமாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்க உள்ளது. இந்த கட்டிட பணியானது 9 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் என்பதால் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க திட்டமிட்டனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் உதவியுடன் காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கையில் சுமார் 210 கடைகளுடன் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு தற்காலிக காய்கறி சந்தையை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள், மாநகர செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்