கலெக்டர் அலுவலகம் அருகே கிடந்த கோவில் உண்டியல்-போலீஸ் விசாரணை
நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே கிடந்த கோவில் உண்டியல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலையில் கோவில் உண்டியல் கிடந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த உண்டியலை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அது எந்த கோவிலில் இருந்த உண்டியல்?, அதனை யார் அங்கு எடுத்து வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.