சவுதிஅரேபியாவுக்கு மீன்பிடிக்க சென்ற வாலிபர் திடீர் சாவு

சவுதி அரேபியாவுக்கு மீன்பிடிக்க சென்று இறந்த வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி அவரது மனைவி கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2022-11-14 18:45 GMT

ராமநாதபுரம், 

சவுதி அரேபியாவுக்கு மீன்பிடிக்க சென்று இறந்த வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி அவரது மனைவி கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார்.

வாலிபர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரின் மனைவி ஞானசிந்து நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணமாகி இசைஅமுதன் (3) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது கணவர் முனீஸ்வரன் கடந்த ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு மீன்பிடி தொழில் செய்ய சென்றார். அங்கிருந்து தினமும் எங்களுடன் பேசி வந்தார்.

இந்நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு திடீரென்று அவர் இறந்துவிட்டதாக அங்குள்ளவர்கள் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் நாங்கள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். எனது கணவரின் உயிருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

நிவாரணம் வழங்க வேண்டும்

வெளிநாட்டில் இறந்து போன எனது கணவரின் உடலை முறைப்படி நல்லடக்கம் செய்ய ஏதுவாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வயது மகனுடன் தவித்து வரும் எனக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கண்ணீர் மல்க கதறி அழுத ஞானசிந்துவின் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக அவருடன் பா.ஜனதா மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் மீனவரது உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்