வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
கமுதியில் வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கமுதி,
கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இடைச்சியூரணி விலக்கு பகுதியில் போலீசாரை கண்டதும் வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி சோதனை செய்த போது பெரிய வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்த போது கன்னார்பட்டியை சேர்ந்த ரமேஷ்(வயது 24) என தெரிய வந்தது. தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.