போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

சங்கரன்கோவிலில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-09 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கருத்தானூரை சேர்ந்த சண்முகையா மகன் லலித் குமார் (வயது 20) என்பதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதற்கு அவர், நீங்கள் எப்படி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யலாம், நான் கோர்ட்டில் அபராதம் கட்டிக் கொள்கிறேன் என்று போலீசாரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலித் குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்