தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டிவனம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-09-19 18:45 GMT

விழுப்புரம்

தொடர் குற்றங்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா குருமஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் வினோத்குமார் (வயது 26). இவர் மீது திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 11.8.2022 அன்று கீழ்மாவிலங்கை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் கழுத்தில்கிடந்த 13 பவுன் நகையை பறித்துச்சென்ற வழக்கில் வினோத்குமாரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்பேரில் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்