புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் சிக்கினார்
பெரியகுளத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனாட்சி மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தென்கரை தண்டுபாளையத்தை சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 30) என்பவர் வீட்டு அருகே புகையிலை பொருட்களை வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.