கோவிலுக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

கோவிலுக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-08-09 20:22 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோடு பின்புறம் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த நபர் திடீரென கோவிலுக்குள் புகுந்து திருட முயன்றார். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் கலைஞர் நகரை சேர்ந்த மாட்டு வண்டி ஓட்டும் சூர்யா (வயது 21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்