தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடந்த முதியவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.;

Update:2022-08-02 01:08 IST

ஜோலார்பேட்டை

தண்டவாளத்தை கடந்த முதியவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பையாண்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்பவரின் மகன் விஜி (வயது 25). இவர் நேற்று காலை ஜோலார்பேட்டை- சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்