பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

அரக்கோணத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-14 18:26 GMT

அரக்கோணம் பழனிபேட்டை டி.என்.நகரை சேர்ந்தவர் ராம்வர்தா மீனா (வயது 40). ரெயில்வே காண்டிராக்டர். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பிஓடி வீட்டின் அருகே மறைந்து கொண்டான். இது குறித்து ராம்வர்தா மீனா அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறைந்து இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த சாரதி (21) என்பதும், கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்