நண்பனின் கையை கத்தியால் கிழித்த வாலிபர் கைது

நண்பனின் கையை கத்தியால் கிழித்த வாலிபர் கைது

Update: 2022-09-11 19:52 GMT

கும்பகோணம்

மதுகுடிக்க பணம் தர மறுத்த நண்பனி்ன் கையை கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுகுடிக்க பணம் தர மறுப்பு

கும்பகோணம் சோலையப்பன் தெரு விஸ்வநாதர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது42). பாணாதுறை மோரிவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(45). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று மதியம் 3 மணிக்கு கும்பகோணம் டைமண்ட் சந்திப்பில் உள்ள மதுபான கடை வாசலில் குமரசேன் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த அய்யப்பன், குமரேசனிடம் தனக்கு மது குடிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் 2 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

கைது

இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரேசன் கையை குத்தி கிழித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமரேசன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்