பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபர் கைது
பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர், மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள பொது கழிவறைக்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.