பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
தஞ்சையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மேலஅலங்கம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் கணேசமூர்த்தி(வயது28). இவர் நேற்று முன்தினம் மதியம் தஞ்சை ஏ.ஒய்.ஏ. ரோடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகில் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணேசமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.