கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
சோளிங்கர் பஸ் நிலையத்தில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா வீராணத்தூர் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் மகன் ஞானசேகர் (வயது 23) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.